புத்தாண்டினை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புத்தாண்டின் போது பயண கட்டுப்பாடு அல்லது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த எதிர்பார்க்கப்படவில்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் கொரோனா காலப்பகுதியில் புத்திசாலித்தனமாக செயற்படுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டள்ளார்

Advertisement

உயிர்த்த ஞாயிறு தினத்தின் போது முன்னெடுக்கப்பட்ட விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் போன்றே புத்தாண்டின் போதும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக பாகாப்பு பிரிவினர் தயார்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.