தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகைக்கு கொரோனா!

கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகையும், அரசியல்வாதியுமான நக்மாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கொரோனா பரவலால் பாதிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட நக்மாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Advertisement

மேலும் தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.