யாழில் இன்றும் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 88 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பாற்பண்ணை – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் , ஆ.கேதீஸ்வரன், வடமாகாண பிசிஆர் பரிசோதனை அறிக்கையில், மருத்துவர்,நல்லூர், அடையாளம், jaffna news today tamil news today jaffna news today tamil news today யாழ்ப்பாணம் யாழில் யாழ் வடக்கு மாகாணத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா

Advertisement

ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு ஆயிரத்து 3 பேரின் பிசிஆர் பரிசோதனை மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

129 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் பாரதிபுரம் என்ற பகுதியில் 88 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 26 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொற்றாளர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இதன்மூலம் கடந்த 14 நாள்களில் யாழ்ப்பாணம் மாநகர கடைத்தொகுதிகளைச் சேர்ந்த 87 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் .

கொரோனா வைரஸ் என்பது என்ன?
கொரோனா வைரஸ் என்பது விலங்குகளிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் ஒரு நோய். இந்த நோய் படிப்படியாக தற்போது விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.

இந்த வைரஸ் கிருமி வட்ட வடிவில் உள்ளது. இதன்மேல் கிரீடம் இருப்பது போன்ற தோற்றம் கொண்டது. இதனால் தான் இதற்கு கொரோனா என்று பெயர் வைக்கப்பட்டது.

இதுவரை 7 வகையான கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ‘சார்ஸ்’ வகை கொரோனா பூனையில் இருந்தும், ‘மெர்ஸ்’ வகை கொரோனா ஒட்டகத்தில் இருந்தும் மனிதனுக்கு பரவியது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட நாவல் கொரோனா வைரஸ் எந்த மிருகத்தில் இருந்து பரவியது என உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் இல்லை.

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது? அதன் அறிகுறிகள் என்ன?
கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவுடன் சளி மற்றும் இருமல் தான் இருக்கும். இந்த நோயின் தாக்கம் வெளிப்படுவதற்கு 2 வாரங்கள் ஆகும் என உலக சுகாதாரத்துறை நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது அவர்களது வாயில் இருந்து வெளிவரும் நீர் துளிகள் பிறர் மீது படும்போதும் அல்லது அந்த நீர் துளிகள் உள்ள இடங்களில் கை வைத்து அதை முகத்தின் அருகே கொண்டு வரும்போதும் கொரோனா வைரஸ் பரவுகிறது.

இதுவரை உலகில் கண்டறியப்பட்ட கொடிய நோய்களின் பாதிப்புகள் கொரோனாவை விட அதிகமானவையா?

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த செய்ய வேண்டியவை என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது அவர்களது வாயில் இருந்து வெளிவரும் நீர் துளிகளால் தான் அதிக அளவில் பரவுகிறது.

இதனால் கைகளை ‘சோப்’ மற்றும் சானிடைசர் என்ற சுத்திகரிப்பு திரவம் கொண்டு தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுமான வரையில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது நல்லது.

தும்மும் போதும், இருமல் வரும் போதும் துணி வைத்து வாயை மூடிக்கொண்டால் இந்த நோய் பரவுவதை குறைக்கலாம். சுகாதாரமாக இருப்பதால் இந்த நோய் பாதிப்பு முற்றிலும் தடுக்கப்படும்.

முகக்கவசங்கள் அணிவதால் கொரோனா பாதிப்பை தடுக்க முடியுமா?
மருத்துவமனைகள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் முகக்கவசங்கள் அணிந்து செயல்பட வேண்டும்.

முகக்கவசங்களை அனைவரும் அணிய தேவையில்லை. சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் மட்டுமே தாங்கள் வெளியே செல்லும் போது முகக்கவசங்கள் அணியலாம்.

ஒருமுறை பயன்படுத்திய முகக்கவசங்களை பயன்படுத்தும்போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முகக்கவசங்கள் மாற்றுவது நல்லது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பவர்களை பார்க்க செல்பவர்கள் மற்றும் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்கிறவர் மட்டும் என்-95 வகை முகக்கவசங்கள் அணியவேண்டும்.

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா?
பதில்:- சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதைப்போல் நாடு முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. – மருத்துவர், ஆ.கேதீஸ்வரன்