தமிழீழ விடுதலை புலிகளின் காவல்துறை சீருடையை ஒத்ததாம், சீருடையை ஒப்படைக்க பொலிஸார் பணிப்பு, அதிகாரிகளிடம் விசாரணை

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட யாழ் மாநகர காவல் படை கடமைகளை இடைநிறுத்துமாறு விஸ்வலிங்கம் மணிவண்ணண் க்கு பொலிஸாரால் பணிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த பணிப்பை யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மாநகர ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

யாழ் ,

Advertisement

இலங்கை பொலிஸுக்கு ஒத்ததாக யாழ் மாநகர காவல்துறை அமைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்திருந்தனர் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் யாழ் மாநகர சபை ஆணையாளர் நேற்றிரவு யாழ் தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு பல நேரம் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டார்.

மாநகர காவல் படை ,யாழில்,விஸ்வலிங்கம் மணிவண்ணண், யாழில், பொது இடங்களில் குப்பை கொட்டினால், வெற்றிலை துப்பினால், அதிரடி, தூய்மையாக பேணுவதற்காக, யாழ்ப்பாணம்,jaffna news ,tamil news, today tamil news

அதனைத் தொடர்ந்தே மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படையின் கடமைகளை இடைநிறுத்துமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபை ஆணையாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதை அடுத்து மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்திருந்தார்.

மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும், வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று மாலை ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தார்.

இந்த நடைமுறையை கையாள்வதற்காக மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தப் படை சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும் என்றும் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் குறிப்பிட்டிருந்தார்.