யாழ்.ஊர்காவற்றுறை பகுதியில் மதுபானசாலையை தடை செய்யக்கோரி எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கு காவல்துறையினர் அச்சுறுத்தல்!

யாழ்.ஊர்காவற்றுறை பகுதியில் மதுபானசாலையை எதிர்த்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் போராட்ட ஒழுங்கமைப்பாளர்களை பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.

ஊர்காவற்றுறை பகுதியில் அமைக்கப்பட்டிருத்த மதுபானசாலை 2016ம் ஆண்டு மூடப்பட்ட நிலையில் மீளவும் அதே மதுபான சாலையை திறப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த மதுபானசாலை திறக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில்,

Advertisement

போராட்டத்தை ஒழுங்கமைத்த மக்களை பொலிஸார் அச்சுறுத்துவதாகவும், கொரோனா பரவலை காரணம் காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள மக்கள்,

திட்டமிட்ட படி போராட்டம் நடக்கும் எனவும் கூறியுள்ளனர்.