ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கைது

ஜம்புரேவெல சந்திரரதன தேரர்  உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஜம்புரேவெல சந்திரரதன தேரர் உள்ளிட்ட இருவரும் கொழும்பு – கோட்டை பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பு – கோட்டை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கோட்டை பொலிஸாரின் வாகனமொன்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட குற்றச்சாட்டுடன் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வரும் நிலையில், இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Advertisement