யாழிற்கு தனி பொலிசா? அப்போ ஒரு நாடு ஒரு சட்டம் எதற்கு? நாடாளுமன்றத்தில் எகிறிய எம்பி

நாட்டில் ஒரே சட்டம் இருந்தால், ஒரே பொலிஸார்தான் இருக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

போக்குவரத்து கடமைக்காக யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் பொலிஸ் சீருடையில் இன்னொரு குழு களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கின்ஸ் நெல்சன் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

இலங்கை ஒரே நாடு, ஒரே சட்டம் என அரசாங்கம் கூறுகிறது. நாட்டில் ஒரு காவல் துறை மட்டுமே உள்ளது. ஆனால், யாழ்ப்பாண மாவட்ட மேயர் போக்குவரத்தை கட்டுப்படுத்த ஒரு தனி குழுவை நியமித்துள்ளார்.

இந்த குழுவிற்கு விடுதலைப் புலிகளைப் போலவே ஒரு சீருடையும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சாமல் ராஜபக்ஷ , பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என்றும், அதில் எம்.பி. கிங்ஸ் நெல்சனையும் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை முன்வைக்குமாறும் அவருக்கு அழைப்பு விடுத்தார்.