டென்மார்க்கில் பரவும் புதிய வைரஸால் பாதிக்கப்பட்ட மூவர் கொழும்பில் கண்டுபிடிப்பு!

டென்மார்க்கில் பரவும் புதிய விகாரமடைந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 3 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளரான காலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பெற்றுக்கொள்ளப்பட்ட 55 மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த மாதிரிகளில் 36 மாதிரிகள், இலங்கையில் பரவும் டீ – 1 411 வைரஸ் வகையை சேர்ந்தவையாகும்.

Advertisement

இந்த மாதிரிகளில், பிரித்தானியாவில் பரவும் மற்றுமொரு விகாரமடைந்த வைரஸ் தொற்று உறுதியான நோயாளர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேநேரம், பிரித்தானியாவின் விகாரமடைந்த வைரஸ் தொற்று உறுதியான 7 பேரும் இலங்கையில் அடையாளம் காணப்பட்டனர்.