மூளையில் உள்ள இரத்தநாளம் வெடித்து மாணவியொருவர் பலி!

வனாத்தவில்லு- பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவியின் மூளையில் உள்ள இரத்தநாளம் வெடித்தமையால் ஏற்பட்ட இரத்தக் கசிவே, அவரது திடீர் உயிரிழப்புக்கு காரணம் என, புத்தளம் நீதிமன்ற வைத்திய அதிகாரி கே.டி.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலையில் தரம் 9இல் கல்வி பயிலும் 14 வயதான மாணவியொருவரே திடீரென உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி, 6ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற தவணைப் பரீட்சைக்குத் தோற்றிய போது திடீரென நோய்வாய்ப்பட்டதுடன் பின்னர், சிகிச்சைக்காக புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement