தங்கொடுவ தேங்காய் எண்ணெயிலும் எஸ்லடொக்சின்!

கடந்த தினம் தங்கொடுவை பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட தேய்காய் எண்ணெய் பவுசர்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் எஸ்லடொக்சின் என்ற புற்றுநோய் பதார்த்தம் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாதிரிகள் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இலங்கை பொலிஸாரினால் குறித்த பவுசர்கள் பொறுப்பேற்கப்பட்டு பின்னர் சுங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

Advertisement

இது தொடர்பில் இலங்கை சுங்கம் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்வதகாவும் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு மற்றும் சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளின் அறிக்கைகளை எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.