இளம் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, 2017 முதல் படங்களில் நடித்து வருகிறார். விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி, அடுத்ததாக மணி ரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா லக்ஷ்மி, இன்ஸ்டகிராமில் கூறியதாவது:
நான் முகக்கவசம் அணிந்தேன், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தேன், கைகளை நன்கு கழுவினேன். பரிந்துரைத்த அத்தனையையும் செய்தேன். எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். தற்போது அதற்குத் தேவையான மருந்துகளையும் உணவுகளையும் உண்டு வருகிறேன். பால்கனியில் நின்றுகொண்டு என் பெற்றோருடன் உரையாடுகிறேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள். இதை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றார்