யாழ்.நல்லுார் பாணங்குளம் பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தவிர்ப்பதற்காக நடராஜர் சிலை வைத்த ஜீவிகள்!

யாழ்.நல்லுார் – பாணங்குளம் பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தவிர்ப்பதற்காக நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த சிலை வைக்கப்பட்டதன் பின்னரும் அப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது. 

யாழ்.மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியில் நல்லூர் பாணாங்குளம் அமைந்துள்ளது. அதனைச் சூழ தொண்டு நிறுவனங்கள் உள்பட குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் வெளியில் இருந்து வரும் நபர்களால் குப்பைகள் போடப்படுவதாக பல தரப்பினரிடமும் முறையிடப்பட்டது. 

பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்தப் பகுதியில் குப்பைகள் வீசப்படுவதைத் தடுக்க முடியவில்லை. 

அதனால் குப்பைகள் வீசப்படும் இடத்தில் திடீரென நடராஜப் பெருமானின் சிலை ஒன்று வைக்கப்பட்டது. 

அந்த சிலையை இன்று அவதானிக்க முடிந்தது. எனினும் சிலை வைக்கப்பட்ட பின்பும் அந்தப் பகுதியில் குப்பைகள் வீசப்படுகின்றன.

Previous articleசந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை மக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம்!
Next articleதோல் நோய்களை நீக்கும் மூக்கிரட்டை தைலம்!