யாழில் கொள்ளையர்கள் கொடூரம்! கடும் சித்திரவதையில் முதியவர் பலி!

தென்மராட்சி பிரதேசத்தில் திருடர்களால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். கொடிகாமம், அல்லாரை பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. இன்று அதிகாலை 12.30 மணியளவில் 3 பேர் கொண்ட திருடர் கூட்டம், முதியவர்கள் தனித்து வாழும் வீடொன்றிற்குள் நுழைந்துள்ளது. முதிய தம்பதியை கட்டி வைத்து, பொருட்கள் இருக்குமிடம் குறித்து சித்திரவதை செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

முதியவரின் கழுத்தை நெரித்து சித்திரவதை செய்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவராசா (70) என்பவரே உயிரிழந்தார். அந்த வீட்டில் தொடர்ந்து நாய் குரைத்துக் கொண்டிருந்ததால் எச்சரிக்கையடைந்த அயல்வீட்டு இளைஞர்கள் அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்கு சென்ற போது கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர். கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி மீட்கப்பட்டார்.

கணவர் உயிரிழந்திருந்தார். சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்றைய இராசிபலன்கள் (12.04.2021)
Next articleஅரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூதாட்டி உயிரிழப்பு?