நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூதாட்டி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகூரை சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அதேநேரம் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் மூதாட்டி உயிரிழந்து உள்ளதாகவும், மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இருப்பு இருப்பதாக நாகை மருத்துவ கல்லூரி முதல்வர் தெரிவித்து உள்ளார்.