யாழில் வங்கியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெரும்தொகையான பணம் திருட்டு!

யாழ்.நகரில் வங்கியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

யாழ்.நகரில் ஸ்ரான்லி வீதியில் உள்ள வங்கி ஒன்றில் பணம் வைப்பிலிடுவதற்காக வந்திருந்த நபர் தனது வெகோ மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு கீழ் உள்ள களஞ்சிய பெட்டிக்குள்

5 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து பூட்டி வங்கியின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வங்கிக்குள் சென்று தனது தேவையை நிறைவேற்றிய பின்னர்,

5 லட்சம் ரூபாய் பணத்தை வைப்பிலிடுவதற்காக மற்றொரு வங்கிக்கு சென்று களஞ்சிய பெட்டியை திறந்தபோது அங்கிருந்த பணம் காணாமல்போயுள்ளது.

உடனடியாக முன்னர் சென்றுவந்த வங்கிக்கு திரும்பி வந்து அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரி.வி கமராவை சோதித்தபோது,

தொலைபேசியில் உரையாடியபடி இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளின் இருக்கையை கிளப்பி களஞ்சிய பெட்டியிலிருந்து பணத்தை சூறையாடுவது பதிவாகியுள்ளது.

இதனையடுத்து அந்த சீ.சி.ரி.வி கமரா பதிவுகளுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

Previous articleவடமாகாண கமநலசேவை நிலையங்களில் தேடுவாரற்று கிடந்து இத்துப்போன உழவு இயந்திரங்கள்!
Next articleவவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் அவதி!