வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் அவதி!

வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதுடன், மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வவுனியாவில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக இன்று (திங்கட்கிழமை) அதிகாலையிலிருந்து ஏ9 வீதி உட்பட பல பகுதிகள் பனிமூட்டமாக காட்சியளித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் அதிகாலையில் தமது கடமைகளுக்குச் செல்லும் வாகனச் சாரதிகள், தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள், விவசாயிகள், தனியார் துறையினர் போன்ற பல்வேறு தரப்பினர் இன்றைய தினம் போக்குவரத்து பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.

Previous articleயாழில் வங்கியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெரும்தொகையான பணம் திருட்டு!
Next articleஇலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டவுள்ள அபாயம்!