இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டவுள்ள அபாயம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 225 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 175 பேர் குணமடைந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 631 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனா தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 902 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 316 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம் மற்றும் பத்தேகம பகுதிகளிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன என்பதுடன், 60 மற்றும் 72 வயதுடைய ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த தொற்று காரணமாக நாட்டில் இதுவரையில், 595 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் அவதி!
Next articleயாழிற்கு திடீர் விஜயம் செய்த இராணுவத் தளபதி!