சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டு?

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இருப்பினும் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தப்போவதில்லை என அமைச்சின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில நாட்களில் தொழிற்சாலைகள் மற்றும் பிற ஆலைகளின் செயற்பாடுகள் குறையும் என்பதால், நாளாந்த மின் தேவை குறையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

20% நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும், கிட்டத்தட்ட 40% லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மூலமாகவும் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது என அமைச்சின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleமியான்மார் இராணுவ ஆட்சியால் 614 பேர் சுட்டுக்கொலை!
Next articleலண்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி!