லண்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி!

இந்திய-அமெரிக்கரான 5 வயது சிறுமி புத்தகங்கள் படிப்பதில் லண்டன் மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்று அசத்தியுள்ளார்.

கியாரா கவுர் என்ற 5 வயது சிறுமிக்கு, புத்தகங்கள் மீதான அவளது ஈர்ப்பு ஒரு தனித்துவமான உலக சாதனை படைக்க உதவியுள்ளது.

சமீபத்தில், 36 புத்தகங்களை 105 நிமிடங்கள் இடைவிடாது வாசித்த அவர் லண்டனின் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகியவற்றில் இடப்பெற்று அசத்தியுள்ளார்.

பிப்ரவரி 13 அன்று அவர் இந்த சாதனையை படைத்தார். உலக சாதனை புத்தகம் அவரை ‘அதிசய குழந்தை’ என்று அழைத்தது. மிகச் சிறிய வயதிலேயே, கியாரா ஒரு தீவிர நூலாளராக ஆனார்.

அபுதாபியில் வசிக்கும் இந்திய-அமெரிக்கரான சிறுமி தனது காரிலோ அல்லது ஓய்வறையிலோ எங்கிருந்தாலும் புத்தகங்களை படிப்பதையே பழக்கமாக கொண்டிருந்தார்.

ஒரு நாள், கியாராவின் நர்சரி ஆசிரியர் அவர் நூலகத்தில் தீவிரமாக படிப்பதைப் பார்த்து, அவரது ஆர்வத்தை உணர்ந்தார்.

புத்தககங்கள் படிக்கும் அரவத்தைப் பற்றி பேசிய கியாரா, வண்ணமயமான படங்கள் மற்றும் பெரிய நூல்களைக் கொண்ட புத்தகங்களை விரும்புவதாகவும், மேலும், சிண்ட்ரெல்லா, ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட், லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் போன்றவை தனக்கு மிகவும் பிடித்தவை என்றும் கூறியுள்ளார்.

கியாராவின் தாத்தா தான் அவளுக்கு படிக்க ஆர்வத்தைத் தூண்டியதாக அவரது தாயார் கூறியுள்ளார். மேலும், ​​கியாரா வருங்காலத்தில் ஒரு டாக்டராக வேண்டும் என்று கனவு காண்கிறார்.

Previous articleசித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டு?
Next articleகணவனுடன் வாய்த்தர்க்கம் முத்தியதால் 25 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளம்யுவதி!