கிறிஸ்தவ மதத்திலிருக்கும் சில வெள்ளை அங்கியினரின் செயற்பாட்டால் கிறிஸ்தவ மதமே வெட்கமடைகிறது!

கிறிஸ்தவ மதத்தில் இருக்கும் சில வெள்ளை அங்கினரின் செயற்பாட்டால் கிறிஸ்தவ மதமே வெட்கம் அடைவதாக தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் டானியல் தியாகராஜா கவலை தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற சம்பவத்தையும்அதனூடாக வழி வந்த செய்திகளை பார்த்துக் கவலை அடைந்தேன்.

தென்னிந்திய திருச்சபையின் பேராயராக நான் இருக்கின்ற நிலையில் எம்மில் இருந்து பிரிந்த சிலர் தமக்கான ஒரு சபையை ஆரம்பித்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியுடன் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தென்னிந்திய திருச்சபையுன் எவ்வித தொடர்பும் அற்றவர்கள் என வடக்கு கல்விச் செயலாளருக்குத் தெரியப்படுத்தியும் எம்முடன் பேசி சுமுகமான முடிவை எடுக்க முயற்சிக்கவில்லை.

தென்னிந்தியத் திருச்சபை சிலோன் அமைப்பினரை அழைத்து தமது சொத்து தொடர்பில் பேசியமை இவர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளை எடுத்துக்கட்டுகின்றது.

தற்போது தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இடம்பெற்றுவரும் பிரச்சினைக்குரிய இடமான அமெரிக மிசன் குருமார்கள் தங்கிய வீட்டின் அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது.

1816 ஆம் ஆண்டு யாழ் வந்த குருமார்கள் தங்கிய இடம் யூனியன் கல்லூரியில் காணப்படுகின்ற புராதன கட்டடம் அதனையே சில வெள்ளை அங்கியினர் அடாத்தாக தம் வசம் இழுப்பதற்கு முயல்கின்றனர்.

மிஷனரி மாரின் பின்னர் எமது சுதேசிகள் அமெரிக்கன் மிஷன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளை மேற்பார்வை செய்து வழி நடத்தி வந்தனர்.

அவ்வாறு மேற்பார்வை செய்தவர்கள் தங்குவதற்கான இல்லமாக இந்தப் புராதன கட்டடம் வழங்கப்பட்டு வந்தது.

அரசாங்கத்திடம் யூனியன் கல்லூரியை ஒப்படைத்து போராயராகஅதற்கு மாற்றாக காணி ஒன்றை வழங்கி இல்லத்தை எமக்கு தர வேண்டும் என அரசாங்கத்துடன் கோரிக்கை வைத்து பெற்றுக் கொண்டோம்.

பிரச்சினைகள் எழும்போது உரியவர்களுடன் அனுகி சுலபமாக அதனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

யூனியன் கல்லூரியில்அமைந்துள்ள பழைய குருமார்கள் தங்கிய இல்லம் பின்னர் அதிபர்கள் மணியாக பயன்படுத்திய இடங்களை குறித்த பாடசாலைக்கு பாவனைக்காக வழங்குவதில் எமக்கு ஆட்சேபனையில்லை.

ஆனால் அவற்றை அவர்களுக்கு வழங்கி விட வேண்டும் அல்லது அவர்களுக்குத்தான் உரியது என வாதிடுவது தவறாகும்.

ஏனெனில் அது எமது பாரம்பரிய சொத்து அதனை யாருக்கும் நாம் வழங்கிவிட முடியாது.

ஆகவே வரலாறு தெரியாதவர்களும் வரலாற்றை அறிய விரும்பாதவர்களும் செய்யும் ஒரு சில காரியங்கள் கிறிஸ்தவ மதத்துக்கே கலங்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Previous articleகால்வாய் ஒன்றில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்!
Next articleஒரே காம்பில் முழைத்த மூன்று கத்தரிக்காய்