ஒரே காம்பில் முழைத்த மூன்று கத்தரிக்காய்

தமிழகத்தில் ஒரே காம்பில் மூன்று கத்தரிக்காய் விளைந்ததை மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் கொள்ளிடத்திற்கு கும்பகோணம் பகுதியில் இருந்து தினமும் லொறிகள் மூலம் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

நேற்று வழக்கம் போல் காய்கறிகள் வந்த நிலையில், ஒரு கத்தரிக்காய் வித்தியாசமாய் இருந்துள்ளது, அதாவது ஒரே காம்பில் மூன்று கத்தரிக்காய்கள் இருந்துள்ளன.

இதனை அந்த கடைக்காரர் காட்சிப்பொருளாக வைக்க, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

ஒரே காம்பில் மூன்று கத்தரிக்காய் இருப்பதால் இது அதிசயமானது என்றும், சிவனுக்கு மூன்று கண்கள் இருப்பது போல் கத்தரிக்காயும் மூன்றாக இருப்பதால் அதிர்‌‌ஷ்டமானது எனவும் கூறி வருகின்றனர்

Previous articleகிறிஸ்தவ மதத்திலிருக்கும் சில வெள்ளை அங்கியினரின் செயற்பாட்டால் கிறிஸ்தவ மதமே வெட்கமடைகிறது!
Next articleஇவரை பற்றி தகவல் வழங்கினால் 1 மில்லியன் அன்பளிப்பு, காவல்துறை அறிவிப்பு