சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மதுபான சாலைகளில் குவியும் மக்கள் கூட்டம்!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மதுபான சாலைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று மதுபான கடைகளில் பலர் கூடியதை காணமுடிந்தது.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 13 மற்றும் 14 திகதிகளில் மதுபான சாலைகள் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இருப்பினும் சில சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் பிற குறிப்பிட்ட கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் காலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை மீறும் மதுபானக் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு பாராட்டு!
Next articleரஞ்சன் ராமநாயக்கவிற்காக நாடாளுமன்ற பதவியை துறக்கின்றார் ஹரின்!