ரஞ்சன் ராமநாயக்கவிற்காக நாடாளுமன்ற பதவியை துறக்கின்றார் ஹரின்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக மே மாத முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று இடமபெற்ற பேரணியில் பேசிய அவர், “நான் ரஞ்சன் ராமநாயக்க சார்பாக ஒரு அரசியல் முடிவை எடுத்து வருகிறேன். மே முதல் வாரத்தில், நான் அரசாங்கத்திற்கு ஒரு சவாலை முன்வைப்பேன்.” என கூறியுள்ளார்.

குறித்த அறிவிப்பு மூலம் தனது நாடாளுமன்ற ஆசனத்தை ஹரின் பெர்னாண்டோ தியாகம் செய்வார் என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பார்.

இதனை அடுத்து அவரை நாடாளுமன்றத்திற்கு அனுமதிக்கும் வகையில் தனது உறுப்புரிமையை ஹரின் பெர்னாண்டோ இராஜினாமா செய்வார் என அறிய முடிகின்றது.

Previous articleசித்திரை புத்தாண்டை முன்னிட்டு மதுபான சாலைகளில் குவியும் மக்கள் கூட்டம்!
Next articleயேர்மன் நாட்டில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மாரடைப்பால் மரணம்!