யேர்மன் நாட்டில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மாரடைப்பால் மரணம்.
தாயகத்தில் கொக்குவில், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிக்கவும், கன்னாதிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், தற்போது யேர்மனியில் வசித்து வந்தவருமான செல்வன். மகாதேவன் பிரபாகரன் அவர்கள், அகதித் தஞ்சம் கோரி வாழ்ந்த முகாமில் கடந்த வெள்ளிக்கிழமை (09.04.2021) அன்று காலமாகியுள்ளார்.
புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில், அண்மை நாட்களாக மன உளைச்சலோடு வாழ்ந்த இவரது மரணம் மாரடைப்பால் ஏற்பட்டிருக்கலாமென அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.