ஹட்டனில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஸ்தலத்திலேயே இளைஞன் பலி!

ஹட்டனில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் மக்கள் வங்கிக்கருகில் இன்று பிற்பகல் 02 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Advertisement

ஹட்டன் நகர பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலே பலியாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விக்கடனிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பயணிகள் பஸ்ஸில் மோதுண்டு விழுந்த இளைஞன் பஸ்ஸின் பின் சில்லில் சிக்குண்டே பலியாகியுள்ளார்.

சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலியான இளைஞன் இதுரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படும் நிலையில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.