மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

பல்பொருள் அங்காடிகளிலும் பொது போக்குவரத்திற்காகவும் மக்கள் தேவையில்லாமல் கூடுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த இரு நாட்களில் பல பகுதிகளில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வரம்பை மீறி 500 முதல் 1,000 பேர் வரை ஒன்று கூடியமையை அவதானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதால் ஏற்படும் விளைவுகளை அடுத்த சில நாட்களில் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகள் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுபவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Previous articleஇன்றைய இராசிபலன்கள் (12.04.2021)
Next articleகொள்ளையிடப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்கள் பொலிஸ் இணையத்தளத்தில்!