கொள்ளையிடப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்கள் பொலிஸ் இணையத்தளத்தில்!

கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்களை பொலிஸ் தலைமையகம் தனது இணையத் தளத்தில் பகிரங்கபப்டுத்தியுள்ளது.

www.ineed.police.lk எனும் இணையத் தள முகவரியில் சென்று அந்த விபரங்களை பார்வை இட முடியும் என பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்தது.

இவ்வாறான நிலையில், ஒருவர் பயன்படுத்திய தொலைபேசியையோ அல்லது புதிதாக ஒரு தொலைபேசியையோ கொள்வனவு செய்யும் போது, முதலில் தான் கொள்வனவு செய்ய உள்ள தொலைபேசியின் EMI இலக்கத்தைப் பெற்று, பொலிஸ் இணையத் தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள திருட்டு போன தொலைபேசிகளின் EMI இலக்கங்களுடன் ஒப்பீடு செய்து தகவல்களை உறுதி செய்துகொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

அவ்வாறு ஒப்பீடு செய்வதன் ஊடாக தான் கொள்வனவு செய்யும் தொலைபேசி சிக்கலுக்கு உரியதல்ல என்பதை ஒருவர் உறுதி செய்துகொள்ள கூடியதாக இருக்கும் என பொலிஸார் கூறுகின்றனர்.

திருடப்பட்ட தொலைபேசிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையிலேயே, பொலிசார் வீண் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு பொது மக்களிடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Previous articleமே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Next articleராகு காலம், எமகண்டம். குளிகை காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது