யாழ்.சாவகச்சேரியில் வீதியால் சென்ற இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்!

யாழ்.சாவகச்சோி – அல்லாரை ஆலடிவெளி பகுதியில் வீதியால் சென்ற இரு இளைஞர்களை வழிமறித்த வன்முறை கும்பல் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் மோட்டார் சைக்கிளை தீ வைத்துக் கொழுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. ஆலடிவெளி பகுதியில் மோட்டார் சைக்கிளை வழிமறித்த வன்முறை கும்பல், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மீது சரமாரியான தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலையடுத்து இளைஞர்கள் தப்பி ஓடிய நிலையில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொழுத்திய வன்முறை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றது.

Previous articleராகு காலம், எமகண்டம். குளிகை காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது
Next articleபெரும் கவலையடைகிறேன் – உச்சத்தை தொடப் போகிறது!! ஸ்ரீலங்கா இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை