வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டினுள் வீழ்ந்து விபத்தான இளைஞன்!

வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டினுள் முச்சக்கரவண்டியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (12.04.2021) திங்கட்கிழமை இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கூமாங்குளம் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி வைரவப்புளியங்குளம் குளக்கட்டினை அண்மித்த சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து குளக்கட்டினிலிருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டியினை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Previous articleஅரசாங்கத்தால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்வதில் திண்டாடும் மக்கள்!
Next articleஉயர்தர பரீட்சை பெறுபேறுகள் இரு வாரத்திற்குள் வெளியாகும் – கல்வி அமைச்சு!