முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மே -18ம் திகதி வழக்கம்போல் இடம்பெறும் என ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்திருக்கின்றது.
அதன்படி 18 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு சுடரேற்றி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்றைய நாளில் வடகிழக்கு மகாணங்களிலும் ஏனைய இடங்களிலும் கறுப்புக் கொடியைப் பறக்கவிடுமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் அன்று மாலை 6 மணிக்கு வணக்கத் தலங்களில் மணி ஒலித்து, வீடுகளில் விளக்கேற்றி அக வணக்கம் செலுத்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறும் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.