ஜீவன் தொண்டமானுக்கு சேர் என அழைத்து அவரும் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமாம்!

சிறிலங்கா இராஜாங்க அமைச்சரான ஜீவன் தொண்டமானுக்கு சேர் என அழைத்து அவரும் வரும்போது எழுந்து நிற்கும்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையக ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு காரணம், இராஜாங்க அமைச்சர் ஜீவன் வயதில் சிறியவர் என்பதால் அவரை சேர் என அழைப்பதில் சிலர் சங்கடப்படுவதாகவும், அவர் நடந்துவருகையில் எழுந்து நிற்பதற்குத் தயங்குவதாகவும் தலைமையக ஊழியர்களிடையே கதை நடந்துள்ளது.

இதனை அவதானித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் மேற்படி உத்தரவை ஊழியர்களுக்கு அளித்திருப்பதாகவே கூறப்படுகிறது.

Previous articleஇலங்கையில் 11 பயங்கரவாத குழுக்கள் தடை!
Next articleபுத்தாண்டு பலன்கள் – சிம்ம ராசி