புத்தாண்டு பலன்கள் – சிம்ம ராசி

சூரியன் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு இந்த வருடம் கிரக சஞ்சாரங்கள், பார்வை, சேர்க்கை ஆகியவற்றை பார்க்கும்பொழுது தடைகள்,

மன உளைச்சல் நீங்கும். சனி 6ல் குருவுடன் இருப்பதால் யோக பாக்கியங்கள் கூடிவரும் நேரம் வந்துள்ளது.

இந்த வருடம் உங்கள் வாழ்க்கையின் வசந்தகாலமாக இருக்கும். சித்திரை மாதம் சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் பூர்வீகச் சொத்து சம்பந்தமாக பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும்.

புத்தாண்டு பலன்கள் – சிம்ம ராசி இருக்கும் வரும் சனி உங்கள் கிடைக்கும் புதிய ராசிபலன்கள் இன்றைய நாள் இன்றைய நாள் astrology today புத்தாண்டு பலன்கள் – சிம்ம ராசி இருக்கும் வரும் சனி உங்கள் கிடைக்கும் புதிய ராசிபலன்கள் இன்றைய நாள் இன்றைய நாள் astrology today இன்று ஏற்படும் குடும்பத்தில் இருக்கும் உங்களுக்கு உண்டாகும் கிடைக்கும் குறையும்

அதிகம் கறாராக இருக்காமல் விட்டுக்கொடுத்து பேசி முடித்துக்கொள்வது உத்தமம்.

சகோதரி மகள் திருமண விஷயமாக தாய்மாமன் வரிசை, சீர், மொய்ப்பணம் எனச் செலவுகள் உண்டாகும்.

உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பொறாமைப்படுவார்கள். பொசுங்கிப் போவார்கள். சனி 6ல் இருப்பது லட்சுமி யோகமாகும்.

பொருளாதாரப் பிரச்னைகள், பணப் பிரச்னைகள் உருட்டல், புரட்டல் விவகாரங்கள் எல்லாம் முடிவுக்கு வரும். கேது 4-ல் இருப்பதால் சதா அலைச்சல், பயணங்கள் இருக்கும்.

தாயார் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவரவர் வயதிற்கேற்ப உடல்நலத்தில் குறைபாடுகள் ஏற்படும். வாய்வு, அஜீரணக் கோளாறுகள் வரலாம்.

B.P. அதிகரிக்க வாய்ப்புள்ளது. பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். குருவின் பார்வை காரணமாக பாதியில் நிற்கும் கட்டிட வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள்.

நண்பர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். நண்பர்களிடையே நட்பில் விரிசல்கள் வரவாய்ப்புள்ளது.

READ MORE >>> இன்றைய ராசிபலன்கள் – 04.02.2021
குருவின் அவிட்ட நட்சத்திர சஞ்சாரம் உங்களுக்கு எல்லா வகையிலும் லாபகரமாக அமையும். கௌரவ பதவிகள் தேடி வரும்.

புத்தாண்டு பலன்கள் – சிம்ம ராசி இருக்கும் வரும் சனி உங்கள் கிடைக்கும் புதிய ராசிபலன்கள் இன்றைய நாள் இன்றைய நாள் astrology today

குரு, சனி பலமாக இருப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். கணவர் வீட்டில் இருந்து வரவேண்டிய பாகப்பிரிவினை சொத்து கைக்கு வரும்.

பெற்றோர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதால் அலைச்சல், மருத்துவச் செலவுகள் வந்து போகும். கணவரின் தொழில் விருத்தியடையும்.

உங்கள் பெயரில் புதிய தொழில் தொடங்கும் யோகம் உள்ளது. வெளிநாட்டில் இருக்கும் மகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும் செய்தி கிடைக்கும்.

அதனால் அயல்நாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். தாய்வழி உறவுகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.

பணம் கொடுப்பது, வாங்குவது சம்பந்தமாக கருத்து வேறுபாடுகள் வரலாம். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு சித்திரை மாதத்திற்குள் வரும்.

கேது அமைப்பு காரணமாக வயிறு, பித்தப்பை கல் பிரச்னைகள் வரலாம்.

புத்தாண்டு பலன்கள் – சிம்ம ராசி இருக்கும் வரும் சனி உங்கள் கிடைக்கும் புதிய ராசிபலன்கள் இன்றைய நாள் இன்றைய நாள் astrology today

உத்யோகஸ்தர்கள்:
ஆறாம் இடத்தில் குரு, சனி இருப்பதால் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிறந்த ஊர், வசிக்கும் ஊரில் இருந்து வெளிமாநிலம், வெளிநாடு செல்ல வேண்டியது இருக்கும்.

லோன் சம்பந்தமாக விண்ணப்பித்தவர்களுக்கு மாசி மாதம் லோன் பணம் கைக்கு வரும்.

விருப்ப ஓய்வு பெற்று வேறு வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு பங்குனி மாதம் கிடைக்கும்.

புத்தாண்டு பலன்கள் – சிம்ம ராசி இருக்கும் வரும் சனி உங்கள் கிடைக்கும் புதிய ராசிபலன்கள் இன்றைய நாள் இன்றைய நாள் astrology today புத்தாண்டு பலன்கள் கடக ராசி காரணமாக கிடைக்கும் இருக்கும் பார்வை இருந்து வரும் நல்ல பரிகாரம் தொழில் – வியாபாரம் – விவசாயம் குருவின் பார்வை

அரசியல்-கலைத்துறை :
செல்வாக்கு உயரும். தொட்டது துலங்கும். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

கட்சி அறிவிக்கும் மக்கள் நலத் திட்டங்களை தலைமை ஏற்றுச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சித்திரை மாதத்திற்குள் எதிர்பாராத பதவியில் அமரும் யோகம் உள்ளது.

மாநில அளவில் உங்கள் கை ஓங்கும். எதிர் அணியில் இருக்கும் செல்வாக்குமிக்க பிரமுகர் உங்கள் அணியில் வந்து இணைவார்.

கலைத்துறையினருக்கு சாதகமான ஆண்டாக அமையும். பாதியில் நின்ற படப்பிடிப்புக்கள் மீண்டும் தொடங்கும். ஸ்டண்ட் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.

சின்னத்திரையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்படுவீர்கள். பட்டிமண்டப பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்களுக்கு பெயரும், புகழும் கிடைக்கும்.

தொழில்-வியாபாரம்-விவசாயம்:
குரு, சனி, அமைப்பு காரணமாக சாதகமான நிலை இருக்கும். புதிய முதலீடுகள், ஏஜென்சிகள், ஸ்டாக்கிஸ்டுகள், டீலர்ஷிப் எடுத்து வியாபாரத்தை பெருக்குவீர்கள்.

குருவின் அருளால் கையில் பணம் புரளும். கொடுக்கல், வாங்கல் ஸ்திரமாக நடக்கும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும்.

ரெடிமேட் ஆடைகள், பேன்சி ஸ்டோர், பெண்கள் உள்ளாடைகள், வாசனைத் திரவியங்கள், வெள்ளி, தங்கம், இமிடேஷன் நகைகள் வியாபாரம் கை கொடுக்கும்.

பில்டிங் காண்ட்ராக்ட், மின்சார வேலைகள், பெயிண்டிங், கார்பெண்டர், உள் அலங்காரம் சம்பந்தமான தொழிலில் லாபம் வரும். விவசாயம் சீராக இருக்கும்.

புதிய தோட்டம், தோப்பு, எஸ்டேட் வாங்கும் யோகம் உள்ளது. கரும்பு, மஞ்சள், சோளம் கைகொடுக்கும். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விளைச்சலை பெருக்குவீர்கள்.

ஊடுபயிர் விவசாயம் கூடுதல் வருமானத்தை தரும். கிணற்றில் தண்ணீர் வற்றாமல் ஊற்று பெருக்கெடுக்கும்.

பரிகாரம்:
சரபேஸ்வரருக்கு வில்வ மாலை சாத்தி வழிபடலாம். பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணி அம்மனை தரிசிக்கலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஆடை, போர்வை தானம் தரலாம்.

Previous articleஜீவன் தொண்டமானுக்கு சேர் என அழைத்து அவரும் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமாம்!
Next articleஈரளக்குளம் பகுதியில் ஆக்கிரமித்தது பௌத்தம்!