புத்தாண்டை வரவேற்க தயாராகும் கிளிநொச்சி மக்கள்!

கிளிநொச்சியில் மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

சிங்கள, தமிழ் புதுவருடப் பிறப்பு நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், நாடெங்கிலும் புத்தாண்டை வரவேற்க தயாராகும் மக்கள் பொருட் கொன்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கிளிநொச்சி வாழ் மக்களும் மும்முரமாக பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் சமூக இடைவெளியைப் பின்பற்றி மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஈரளக்குளம் பகுதியில் ஆக்கிரமித்தது பௌத்தம்!
Next articleபிலவ புது வருடத்திற்கான பஞ்சாங்க நேரங்கள்!