கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 25 மாத்திரைகளை உட்கொண்ட இளம் பெண்!

திருகோணமலை கந்தளாய் பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 25 மாத்திரைகளை உட்கொண்ட மனைவி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் யுவதி ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இன்று செவ்வாய்க்கிழமை பகல் நடைபெற்றுள்ள.இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்.

குறித்த யுவதி கடந்த வருடம் திருமணம் முடித்த நிலையில் தினமும் இருவரும் சண்டைகள் பிடிப்பதாக அயல் வீடுகளில் வசிப்போர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினமும் சண்டை ஏற்படவே விரக்தியில் மனைவி 25 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார், இந் நிலையில் அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்ததாக அயல் வீட்டுக்காரர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கணவனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவரை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதேவை ஏற்பட்டால் ஜனாதிபதி ஹிட்லராக மாறுவார்!
Next articleதடுப்புக்காவலில உள்ள சுமார் 10,000 கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியம்!