தடுப்புக்காவலில உள்ள சுமார் 10,000 கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியம்!

போதைப்பொருள் விவகாரத்துடன் தொடர்புடைய 8000 இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 9 மாதகாலப்பகுதியில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் குறித்த அறிக்கைகள் கையளிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நிறைவடைந்துள்ளதன் காரணமாக நிலுவையில் காணப்படும் வழக்குகளை இதனூடாக நிறைவு செய்யமுடியும் எனவும் நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக தடுப்புக்காவலில உள்ள சுமார் 10,000 கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் தற்போது நாளாந்தம் 1500 அறிக்கைகள் வெளியிடப்படுவதாகவும் நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Previous articleகணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 25 மாத்திரைகளை உட்கொண்ட இளம் பெண்!
Next articleகனடாவில் நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்!