கனடாவில் நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்!

கனடாவில் கார் சாலையில் இருந்து விலகி சென்று மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் நியூ பிருன்ஸ்விக் மாகாணத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதன்போது கார் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலிருந்து விலகி மரத்தில் மோதியுள்ளது.

இதில் காரை ஓட்டி வந்த ஆண் மற்றும் அவருடன் இருந்த ஒரு பெண் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆண் நபர் உயிரிழந்தார்.

மேலும் மற்றொருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleதடுப்புக்காவலில உள்ள சுமார் 10,000 கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியம்!
Next articleஉருவாகும் உலகின் மிகப்பெரிய ஏசு சிலை; எங்கு தெரியுமா?