உருவாகும் உலகின் மிகப்பெரிய ஏசு சிலை; எங்கு தெரியுமா?

பிரேசில் நாட்டின் என்கேன்டடோ நகரத்தில் 140 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய ஏசு கிறிஸ்துவின் சிலை கட்டப்பட்டு வருகிறது.

உலகிலேயே மிகப்பெரிய ஏசு கிறிஸ்துவின் சிலையாக தற்போது வரை, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரத்திலேதன் அமைந்துள்ளது. 124 அடி உயரம் கொண்ட மீட்பர் கிருஸ்து சிலையே அந்த பெருமையை பெற்றுள்ளது.

இந்தநிலையில் தற்போது, பிரேசில் நாட்டின் என்கேன்டடோ நகரத்தில் 140 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய ஏசு கிறிஸ்துவின் சிலை கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணி 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதற்காக 2 மில்லியன் ரியல் வரை செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணியை ப்ரண்ட்ஸ் ஆஃ கிருஸ்து சங்கம் மேற்கொண்டு வருகிறது.

இந்த கட்டுமான பணிக்கு தேவைப்படும் பணத்தை தனி நபர்களிடமிருந்தும் பல நிறுவனகளிடமிருந்தும் நன்கொடையாக பெறப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த சிலையில் மார்பு பகுதியில் கண்ணாடியாலான ஜன்னல் அமைக்கப்படுகிறது. இதன் வழியாக நகரத்தை பார்வையிடலாம். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என்று கூறப்படுகிறது.

இந்த மைய பகுதியை அடைய லிப்ட்டை பயன்படுத்திக்கொள்ளலாம். 40 டன் எடை கொண்ட இந்த சிலையின் தலைப் பகுதியை கட்டி முடிப்பதற்கு 3 மாதங்கள் ஆனதாக தெரிவிக்கபடுகிறது. இந்த சிலையை வடிவமைத்தவர் ஒரு பாதிரியார் ஆனால் இந்த சிலையை உருவாக்கும் யோசனை நகரின் மேயரான அட்ரோல்டோ கோன்சாட்டி மூலம் உருவானது. அவர் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு காரணமாக இஉயிரிழந்துள்ளதகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சிலையின் கட்டு மான பணியை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவதற்கு ப்ரேசிலில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக 13 மில்லியன் மக்களுக்கும் மேல் பலியாகியுள்ளனர்.

இதேவேளை இந்த சிலையை உருவாக்க முக்கிய காரணம் ஆன்மீக நம்பிக்கையை அதிகரிக்கவும் சுற்றுலா பயணிகளின் வரவை அதிகரிக்க எண்ணியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகனடாவில் நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்!
Next articleஇம்முறை யாழில் நடைபெறவுள்ள வெசாக் உற்சவம்!