இம்முறை யாழில் நடைபெறவுள்ள வெசாக் உற்சவம்!

யாழ்ப்பாணத்தில் இம்முறை அரச வெசாக் நிகழ்வை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச வெசாக் நிகழ்வுக்கு சமமாக ஏனைய மாகாணங்களிலும் வெசாக் நிகழ்வுகள் நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார். எனினும் அதற்கு இன்னும் நேரம் உள்ளதாகவும் புத்தாண்டின் போது மக்களின் செயற்பாட்டினை அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் தெரிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் புத்தாண்டின் போது கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்ய முடியும் என்றால் வெசாக் உற்சவத்தையும் சிறப்பாக செய்ய முடியும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்

Previous articleஉருவாகும் உலகின் மிகப்பெரிய ஏசு சிலை; எங்கு தெரியுமா?
Next articleபிரபல கொமடி நடிகர் செந்திலுக்கு கொரோனா!