பிரபல கொமடி நடிகர் செந்திலுக்கு கொரோனா!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர் தான் செந்தில். கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வாழைப்பழ கொமடியினை வைத்து உச்சக்கட்ட ரசிகர்களை தன்வசப்படுத்தியவர்.

கவுண்டமணி-செந்தில் இணை தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவை கூட்டணியாக திகழ்ந்தது. செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர், அதிமுக மற்றும் அமமுக கட்சிகளில் இருந்த அவர் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவரும் இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇம்முறை யாழில் நடைபெறவுள்ள வெசாக் உற்சவம்!
Next articleகுடும்ப கஷ்டத்திற்காக வேலைக்கு சென்ற 14 வயது சிறுமியை குடும்பத்துடன் சேர்ந்து கொடூரம்!