யாழில் களையிழந்த தமிழ் புத்தாண்டு வியாபாரம்!

யாழ். நகர் பகுதிகளில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் கலையிழந்து காணப்படுவதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புடவை விற்பனை நிலையங்கள் பல இரண்டு வாரங்களாக மூடபட்டிருந்தன.

எனினும் கடந்த வாரம் வர்த்தக நிலையங்களை மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டபோதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களின் கடைகளைத் திறக்க அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் கொரோனா பரவல் அச்சநிலை காரணமாக யாழ். மாநகரில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு புடவை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் நடைபாதை வியாபாரம் ஏராளமாக இடம்பெறுகின்றன.

அதனால் யாழ்ப்பாணம் மாநகரில் புத்தாண்டு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சிறு வர்த்தக நிலையங்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் வர்த்தகர்கள் கவலை தெரிவித்தனர்.

Previous articleகுடும்ப கஷ்டத்திற்காக வேலைக்கு சென்ற 14 வயது சிறுமியை குடும்பத்துடன் சேர்ந்து கொடூரம்!
Next articleஇலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 600ஐ கடந்தது