கொழும்பு – கண்டி வீதியின் கடவத்த, எல்தெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (12) இரவு 11.30 மணியளவில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென U வளைவு ஒன்றை எடுத்ததன் ஊடாக எதிரில் வந்த வேன் ஒன்றுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற நபர் உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மது அருந்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் வேனின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.