யாழில் கொரோனாவால் பலியான 81 வயது பெண்!

யாழ்.மாவட்டத்தில் 19 பேர் உட்டபட வடமாகாணத்தில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் விபரம் வெளியாகியுள்ளதுடன் ஒருவர் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இன்று யாழ்.மாநகரில் 11 பேருக்கும், சண்டிலிப்பாய் பகுதியில் ஒருவருக்கும், பருத்துறையில் ஒருவருக்கும்,

சங்கானையில் ஒருவருக்கும், யாழ்போதனா வைத்தியசாலையில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், மேலும் 3 பேருக்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்.நல்லுார் செட்டித்தெருவை சேர்ந்த 81 வயதான மூதாட்டி ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். அவருக்கு இறப்பின் பின்னர் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

Previous articleஅதிவேகத்தால் பறிபோன உயிர் – சிசிரிவி காணொளி
Next articleயாழில் 19 பேர் உட்பட வடக்கில் 21 பேருக்கு இன்று கொரோனா – 13/4/2021