வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டத்தால் அச்சம்!

நாட்டில் தற்போதைய கோவிட் அசாதாரண சூழலில் நாளைய தினம் புத்தாண்டை முன்னிட்டு வவுனியா நகரில் அதிக சன நெரிசல் காணப்படுகின்றது. இதனால் கோவிட் வைரஸ் தொற்று, வீதி விபத்துக்கள் ஏற்படுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது கோவிட் வைரஸ் பரவுகின்ற அசாதாரண நிலையிலே நாளையதினம் தமிழ் சிங்கள புத்தாண்டினை கொண்டாடுவதற்காக புத்தாடைகள், மரக்கறிகள் என பொருட்களை கொள்வனவு செய்ய வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர்.

இருந்தும் பல இடங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வருபவர்கள் முகக்கவசத்தினை அணிந்து வந்தாலும் சரியான சமூக இடைவெளியை பின்பற்றாததனை அவதானிக்க முடிகின்றது.

இதனால் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகும் அபாயமும் வவுனியா நகரில் ஏற்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா நகரிற்கு அதிக மக்கள் வருகை தந்தனால் சன நெரிசல் அதிகமாகி நடைபாதை வியாபாரங்களாலும் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியமும் அதிகமாக காணப்படுகின்றது. இருப்பினும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

Previous articleசிவனும் சக்தியுமாக தோற்றத்தில் உள்ளதாக கூறி தன்னுடைய மனைவியை தன் தோழிக்கு கட்டிவைத்த கணவன்!
Next articleமோசடி சர்ச்சையில் சிக்கிய இலங்கையின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம்!