வடக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு விசேட அறிவித்தல்!

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ள நிலையில், வடக்கு உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் உள்ள மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

சப்ரகமுவ, மத்திய, மேல், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleஅழகை கெடுக்கும் முகப்பருவை அடியோடு ஒழிக்க!
Next articleஇன்றைய இராசிபலன்கள் (14.04.2021)