நீர்கொழும்பு வைத்தியசாலையில் திடீரென காணாமல் போன 3 பிள்ளைகளின் தந்தை!

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 3 பிள்ளைகளின் தந்தையொருவர் தீடிரென காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 48 வயதுடைய சுசிகரன் (தேவன்) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 2021.04.12 அன்று மதியம் 12.45 மணியளவில் நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் 21வது விடுதியில் இருந்தே காணாமல் போயுள்ளார். குறித்த நபர் 2021.04.10ம் திகதி டுபாயில் இருந்து நாடுதிரும்பிய நிலையில், கொரோனா தொற்றுக்கான PCR பரிசோதனைகளை எடுத்துள்ளார்.

எனினும், அதற்கு அடுத்த நாள் அவருக்கு ஏற்பட்ட வலிப்பு காரணமாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு சென்று, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

9PG71R

இந்த நிலையில், நேற்று மதியம் வைத்தியசாலையில் வைத்து காணாமல் போயுள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர், குறித்த வைத்தியசாலை அதிகாரிகளை தொடர்பு கொண்டு வினவியபோதும் அசட்டையாக பதிலளித்துள்ளனர்.

எனவே, இதன் பின்னணி காரணத்தை கண்டுபிடிக்க முடியாத நிலையில், மூன்று பிள்ளைகளுடன் கணவரை தேடியலையும் தாய்க்கு உதவ முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவரை கண்டால் அல்லது இவர் பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இதேவேளை, கடந்த மாதமும் கொழும்பிற்கு வேலைக்குச் சென்ற தமிழ் இளைஞன் ஒருவர் 4 நாட்கள் காணாமல் போய் தேடியலைந்து இறுதியாக அவர் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புகொள்ளுங்கள். 0772290574, 0757501597.

Previous articleயாழில் மின்சாரம் தாக்கி பலியான இளைஞன்!
Next articleபுத்தாண்டு பிறக்கும் போதே இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள்!