போதை வெறியில் வீதியை கடந்த யானையை மோதிகாயமடைந்த குடிமகன்!

​திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுல கட பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் யானையுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நேற்றிரவு(13) 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு படுகாயமடைந்தவர் கோமரங்கடவல – அடம்பன பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்.குணசேகர (43வயது) ஆவார்.

புத்தாண்டை முன்னிட்டு தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது வீதியைக் கடக்க முற்பட்ட யானையுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் இவரது மோட்டார் சைக்கிள் யானையின் தாக்குதலினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்து சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.​

Previous articleயாழில் 1600 இளைஞர், யுவதிகள் கடந்த 3 மாதங்களில் இராணுவத்தில் இணைவு!
Next articleயாழில் புத்தாண்டில் அதிகாலை நேர்ந்த துயரம்: 8 வயது சிறுவன் இயக்கிய மோட்டார் சைக்கிளில் சிக்கி ஒன்றரை வயது சகோதரி பலி