யாழில் புத்தாண்டில் அதிகாலை நேர்ந்த துயரம்: 8 வயது சிறுவன் இயக்கிய மோட்டார் சைக்கிளில் சிக்கி ஒன்றரை வயது சகோதரி பலி

8 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, சகோதரியான ஒன்றரை வயது பிள்ளையின் மேலாக அது ஏறியதில், குழந்தை உயிரிழந்தது.

இந்த துயரச்சம்பவம் இன்று (14) காலை தென்மராட்சி மட்டுவிலில் நடந்தது.

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8 வயது சிறுவன் ஸ்ராட் செய்த போது, சிறுவனின் கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிள் நகர்ந்தது.

இதன்போது, மோட்டார் சைக்கிளின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த, சகோதரியான ஒன்றரை வயது குழந்தையின் வயிற்று பகுதியின் மேலாக மோட்டார் சைக்கிள் ஏறியது.

உடனடியாக, குழந்தை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை உயிரிழந்திருந்தது.

Previous articleபோதை வெறியில் வீதியை கடந்த யானையை மோதிகாயமடைந்த குடிமகன்!
Next articleபிலவ வருட கைவிசேஷத்திற்கு உகந்த சுபநேரங்கள்!