பிலவ வருட கைவிசேஷத்திற்கு உகந்த சுபநேரங்கள்!

தமிழ், சிங்களப் புத்தாண்டு மலர்ந்துள்ளது. சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நகர்வதை குறிக்கும் வகையில் இன்று அதிகாலை 2.33ற்கு புத்தாண்டு மலர்ந்துள்ளது.

தமிழர்களின் வருடச்சக்கரத்தில் 35ஆவது ஆண்டான பிலவ வருடம் இன்று பிறந்துள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், இன்று அதிகாலை ஒன்று 39ற்கு நிமிடத்தில் பிலவ வருடம் பிறந்தது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, இன்று அதிகாலை இரண்டு 31 ற்கு புதுவருடம் பிறந்துள்ளது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், இன்று முற்பகல் 9.09 தொடக்கம் 9.52 வரையிலும், பிற்பகல் 2.22 முதல் 4.11 வரையிலும், 16ஆம் திகதி அதிகாலை 4.14 முதல் 5.07 வரையிலும் கைவிசேஷத்திற்கு உகந்த சுபநேரங்களாகும். கைவிசேஷத்திற்கு இன்று காலை 6.15 முதல் 7.30 வரையிலும், மாலை 6.15 முதல் 7 வரையிலும் 16ஆம் திகதி காலை 5.15 முதல் 6 மணி வரையிலுமான காலப்பகுதிகள் பொருத்தமானவை என திருக்கணித பஞ்சாங்கம் கூறுகிறது.

நீல, சிவப்பு நிற பட்டாடைகளையோ, நீல, சிவப்பு நிற கரையுள்ள பட்டாடைகளையோ அணிவது நலன்தரும். நீலம், பவளம் பதித்த ஆபரணங்களை அணியலாம்.

Previous articleயாழில் புத்தாண்டில் அதிகாலை நேர்ந்த துயரம்: 8 வயது சிறுவன் இயக்கிய மோட்டார் சைக்கிளில் சிக்கி ஒன்றரை வயது சகோதரி பலி
Next articleபுத்தாண்டில் இரு பெண்கள் கொடூரமாக கொலை!