தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எட்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோரவிபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எட்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களனிகம – தொடம்கொட வீதியில் இன்று முற்பகல் 11 .45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது வேனில் பயணித்த ஒருவர் மாத்திரம் சிறு காயகளுக்குளாகியுள்ள நிலையில் ,வேறு எவருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த விபது காரணமாக அந்த பகுதியில் வாகன நெரிசல் காணப்பட்டது. இதனையடுத்து அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு பொலிஸ் பிரிவினர் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleஅமெரிக்காவின் தலையீட்டை கோருகின்றோம் – காணாமல் போனோரின் உறவுகள்
Next articleயாழிலிருந்து மன்னாருக்கு கடத்தப்பட்ட சுமார் 1989 கிலோ மஞ்சள் அடங்கிய மூடைகள் மீட்பு!