யாழிலிருந்து மன்னாருக்கு கடத்தப்பட்ட சுமார் 1989 கிலோ மஞ்சள் அடங்கிய மூடைகள் மீட்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு கடத்தப்பட்ட சுமார் 1989 கிலோ மஞ்சள் அடங்கிய மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 7.55 மணியளவில் மன்னார் – மூன்றாம்பிட்டி பகுதியில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மஞ்சள் கட்டிகள் கடத்தப்படுவதாக இலுப்பைக்கடவைப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில்

மூன்றாம்பிட்டி பகுதியில் வைத்து வழிமறித்த இலுப்பைகடவை பொலிஸார் மஞ்சள் மூடைகளை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள்

1989 கிலோ கிராம் நிறை கொண்டதோடு, குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட மன்னாரை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட மஞ்சல் மூடைகள் மற்றும் வாகனம் என்பன மன்னார் நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட உள்ளதோடு,

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 5 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எட்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோரவிபத்து!
Next articleபோலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் விமான நிலையத்தில் கைது!